Unlocking ADHD இயக்கத்தில் தொண்டூழியராக வாருங்கள்
நாங்கள் எல்லா வயதினரையும் பலதரப்பட்ட மக்களையும் வரவேற்கிறோம்.
ஏடிஎச்டியால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை உருமாற்றுவதே, சமூகம் சார்ந்த எங்களது அமைப்பின் கனவாகும். எங்களது குழுவில் முழு நேர பணியாளர்கள் தற்போது இல்லாததால் கீழ்க்காணும் முறைகளில் தொண்டூழியர்கள் எங்களுக்கு சேவையாற்றுவதை நாங்கள் மனமார வரவேற்கிறோம்:
- கட்டுரைகளை எழுதுவது, காணொளி தயாரிப்பது, வரைகலை, சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பது
- ஏடிஎச்டி தொடர்பில் ஆய்வு நடத்துவது, ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வுகளை உருவாக்குவது
- நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது, ஆதரவுக்கு குழுக்கள் அல்லது இணையக் குழுக்களை நடத்த உதவுவது
- சமூகத்தில் ஏடிஎச்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது
இவை மட்டுமின்றி, உங்களுக்கு உள்ள வேறு எந்தத் திறமைகள் இருந்தாலும் அதனை இங்கு பயன்படுத்த நினைத்தால் எங்களிடம் தெரிவியுங்கள்.
பிறர் வாழ்க்கையில் நல்ல திருப்பதை ஏற்படுத்த உங்களுடன் செயல்பட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!