ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டபோதும் அதனை எதிர்கொண்டு சாதித்தது பற்றியும் பாதிக்கப்பட்டவர்களிடையே நல்ல நட்பு பெற்றது பற்றியுன் ‘அன்லாக்கிங் ஏடிஹெச்டி’ எழுத்தாளர் சஞ்சு பிரபாகர் பகிர்கிறார்.
பள்ளியில் நல்ல மாணவனாகவே பார்க்கப்பட்டே எனக்குப் பழக்கமாக இருந்தது. நன்றாகப் படித்ததுடன், தலைமைத்துவப் பொறுப்புகளையும் சமூகப் பணிகளையும் சுறுசுறுப்பாக ஏற்றினேன்.
ஆனால் என் மனதிற்குள் ஒருவித சலனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. எனக்கு “கவனக்குறை மிகைச்சுறுதி குறைபாடு” (ADHD) இருப்பதாக நான் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. அதனைப் பற்றி அவ்வளவு சிந்தித்ததும் இல்லை. ADHD உள்ளவர்கள் சிறந்த மாணவர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தால் எனது நிலை கவனிக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
16 வயதாக இருந்தபோது என் கல்விப்பயணத்தில் சவால்கள் அதிகரித்தன. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களைப் பெறும் சிரமம் கூடிக்கொண்டே போனது. இதனைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள் கடுமையாக பேசத் தொடங்கினர். நானும் அழுத்தத்திற்கு உட்பட்டேன். சோர்வின் சுமையால் மனம் வெம்பினேன்.
இவற்றுக்கான ஆதரவை நான் பெற்றபோது, எனது ADHD அறிகுறிகள் (அதாவது, உந்துதல் இல்லாமை, ஒழுங்கின்மை மற்றும் கவனம் செலுத்த இயலாமை) மிகவும் அதிகரிக்க தொடங்கின. சிகிச்சையின் மூலம், என் மனக்கவலையும் மந்தத்தன்மையும் அதிகரித்தன. படிப்பின் மீதான ஆர்வமும் கவனமும் குறைந்தன.
கவனம் செலுத்துவதற்காக காபி அடிக்கடி உட்கொண்டேன். காஃபின் இல்லாமல் என்னால் உற்சாகத்துடன் இயங்குவது கடினமாக இருந்தது. இறுதியில் நான் முழு உளவியல் பரிசோதனைக்கு உட்பட்டேன். 17 வயதில் எனக்கு ADHD இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நோய், மருத்துவ வாயிலாக உறுதிசெய்யப்பட்ட பின், எனக்குத் தேவையான சிகிச்சையைப் பெற முடிந்தது. இதனால் இறுதித் தேர்வுகளுக்குச் சரியான முறையில் என்னைத் தயார்படுத்தினேன். எனது அறிகுறிகளைக் கவனித்து என்னை நன்கு பராமரித்ததற்காக நான் எனது குடும்பத்தினருக்கும் எனது மருத்துவருக்கும் தொடர்ந்து நன்றிகடன் பட்டுள்ளேன்.
மருந்துகளைத் தவிர, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, யோகா, சைவ உணவுமுறை ஆகிய வழிமுறைகள் எனக்கு கணிசமாக உதவின. நான் ஒரு வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை யோகா செய்கிறேன் இதுவும், சரியான உணவு முறையும் என்னுடைய ADHD அறிகுறிகளின் வீரியத்தைக் கணிசமாகக் குறைத்திருப்பதாக உணர்கிறேன். மேலும், மற்றவர்களின் ஆதரவைப் பெறுவது – உதாரணமாக, ஒரு பணியை சரியான நேரத்தில் முடிப்பதற்கு என்னைப் முழு பொறுப்பேற்கச் செய்யும்படி நண்பர்களைக் கேட்பது – தன்முனைப்பைக் தக்க வைத்துக் கொள்ளவும், என் பணிகளில் கவனம் செலுத்தவும் எனக்கு உதவியது.
ADHD இருப்பது எனக்குத் தெரிய வந்ததால் அதற்கேற்ற உதவிகளைக் கேட்டுப் பெறுவதற்கு சுலபமாக இருந்தது. இந்த நோய் இருப்பதை அறிந்ததன் மூலம் என்னால் என்னையே நன்றாகப் புரிந்துகொள்ள இயன்றது. சில காரியங்களை நான் ஏன் செய்தேன் என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த நோயின் கண்டறிதல் எனக்குக் கைகொடுத்தது. என்னை நானே குற்றம் சாட்டுவதை நிறுத்தினேன். அதற்குப் பதிலாக முன்னேறுவதற்கான வழிகளைக் கண்டறியத் தொடங்கினேன். அத்துடன், ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் அறிமுகத்தையும் பெற்றேன். இந்நபர்களின் மூலம் நான் கற்றது பலப்பல.
மருத்துவ உளவியலில் படிப்பை தொடர்வதற்கும் , ADHD சமூகத்திற்கு பங்கு ஆற்றுவதற்கும், துணை போன என் அனுபவங்களின்மூலம் நிறைய கற்றுக்கொண்டேன் நான் இத்துறையில் மிகவும் ஆர்வமாக உள்ளேன், “Unlocking ADHD” மூலம் இந்த ADHD சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை என்னால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்!