UnlockingADHD

Empowering ADHDers and their Families to Live Life to the Fullest

UnlockingADHD

ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி வாழ்க்கையை முழுமையாக வாழ வகை செய்வது.

  • Tamil
    • English
    • Melayu
    • 简体中文
  • ADHD 101
    • என் குழந்தைக்கு ADHD – இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், இப்பொழுது என்ன செய்யவேண்டும்?
    • பொய்யா? உண்மையா?
    • ஏடிஹெச்டி என்றால் என்ன?
  • ADHDயுடன் எப்படி வாழ்வது?
    • பெரியவர்களில் ஏடிஹெச்டி
    • சிறுவர்களில் ஏடிஹெச்டி
    • முதியோர்களில் ஏடிஹெச்டி
    • இளைஞர்களில் ஏடிஹெச்டி
    • குடும்பங்கள்
    • இளைஞர்கள்
  • பங்கேற்றுக்கொள்ளுங்கள்
    • தொண்டூழியர்கள்
    • நன்கொடை
  • தொடர்புக்கொள்ளுங்கள்
ADHD 101, ஏடிஹெச்டி என்றால் என்ன?, ஏடிஹெச்டி வழிகாட்டி

ஏடிஹெச்டி என்றால் என்ன?

ADHD 101, ஏடிஹெச்டி என்றால் என்ன?, ஏடிஹெச்டி வழிகாட்டி
ஜூன் 26, 2022

ஏடிஹெச்டி என்ற என்ன?  ஏடிஹெச்டி எப்படி உறுதி செய்யப்படுத்தப்படுகிறது? அடிக்கடி தவறவிடப்பட்ட பொதுவான  அறிகுறிகள் எவை? ‘ஏடிஹெச்டி அவிழ்த்தல்’ எழுத்தாளர் ஸ்டெஃபனி செங், ஏடிஹெச்டி தொடர்பிலான அறிகுறிகளைப் பற்றிய ஆய்வைப் பகிர்கிறார்.

வரைகலை: ஸ்டெஃபனி செங்

ஏடிஹெச்டி எனப்படும் கவனக் குறைவால் ஏற்படும் மிகை செயல்பாட்டுக் கோளாறு ஓர் உளவியல் பிரச்சினை. இப்பிரச்சினையால் அளவுகடந்த உற்சாகம், முன்யோசனையில்லா நடத்தை ஆகியவை வெளிப்படலாம். ஏடிஹெச்டி சிரமமாகவும் சிக்கலாகவும் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவர்கள் இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும்போது மேலும் நன்கு சமாளிக்க முடியும்.

ஏடிஹெச்டிக்கான ‘டிஎஸ்எம்-5’ தகுதிநிலை

‘டிஎஸ்எம்-5’ எனப்படும் மனநல பாதிப்புகளுக்கான நோய் கண்டறிதல் மற்றும புள்ளிவிவர வழிகாட்டியை மருத்துவர்கள் பயன்படுத்துவர். கவனக் குறைபாடு, மிகை செயல்பாடு, உணர்ச்சிவயப்படுதல் உள்ளிட்டவை ஏடிஹெச்டிக்கான அறிகுறிகள் ஆகும்.

கவனமின்மை


வரைகலை: ஸ்டெஃபனி செங்

கவனமின்மை: 16 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள். 17 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பெரியவர்களுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்குக் காணப்படவேண்டும். வழக்கமான அறிகுறிகள்:

  • – கவனம் செலுத்தத் தவறுவது, கவனக்குறைவால் தவறுகளைச் செய்வது
  • – நடவடிக்கைகளில் கவனம் செலுத்தச் சிரமப்படுவது
  • – இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்ற சிரமப்படுவது, கவனக்குறைவால் தவறுகளைச் செய்வது
  • – செய்ய வேண்டிய வேலைகளையும் இதர காரியங்களையும் நிர்வாகம் செய்வதில் சிரமப்படுவது.
  • – நீண்ட காலத்திற்கு சிந்தனை ஆற்றல் அதிகம் தேவைப்படும் காரியங்களைச் செய்வதில் தயக்கம் அல்லது வெறுப்பு
  • – அடிக்கடி பொருள்களைத் தொலைப்பது
  • – அடிக்கடி கவனம் சிதறுவது
  • – அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி மறதி ஏற்படுவது

மிகை செயல்பாடு, உணர்ச்சிவசப்படுதல்


வரைகலை: ஸ்டெபனி செங் (Stephanie Cheng)

மிகை செயல்பாடு, உணர்ச்சிவசப்படுதல்: 16 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள். 17 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பெரியவர்களுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்குக் காணப்படவேண்டும். வழக்கமான அறிகுறிகள்: 

  • – அடிக்கடி பதற்றப்படுவது, கைகளையும் கால்களையும் தட்டுவது, உடல் நெளிவது
  • – ஓர் இடத்தில் தொடர்ந்து உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அடிக்கடி எழுந்துச் செல்வது
  • – சூழலுக்குப் பொருந்தாத வகையில் ஓடி ஆடுவது, ஏறிக் குதிப்பது
  • – நடவடிக்கைகளில் அமைதியான முறையில் ஈடுபட முடியாமல் இருப்பது
  • – அடிக்கடி நடமாடுவது, இயந்திரத்தினால் இயங்குவது போல பல இடங்களுக்குச் சென்றுகொண்டே இருப்பது
  • – அடிக்கடி அளவுக்கு அதிகமாக பேசுவது 
  • – தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருப்பதற்குச் சிரமப்படுவது
  • – கேள்வி முடியும் முன்னரே பதிலை அவசரமாகச் சொல்வது
  • – மற்றவர்கள் பேசும்போது அடிக்கடி குறுக்கப் பேசுவது, தலையிடுவது

தவறவிட்ட அறிகுறிகள்


வரைகலை: ஸ்டெபனி செங்

ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டோரில் குறைந்தது 75 விழுக்காட்டினர் தங்களுக்கு இந்தப் பாதிப்பு உள்ளது எனத் தெரியாமல் இருப்பதாக நியூயார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவ பேராசிரியரும் முன்னணி ஏடிஹெச்டி ஆய்வாளருமான லென் அட்லர் தெரிவித்தார். தங்களது இந்தப் பிரச்சினை இருப்பதை பலர் இன்னும் அறியாததால் அவர்கள் சிகிச்சை பெறாமலேயே இருக்கின்றனர்.

பொதுவாக, தவறவிடப்பட்ட அறிகுறிகள் யாவை?

  •  – உறங்க முடியாத இரவுகள்
  • – போதிய தன்முனைப்பு இன்மை, முடிவெடுக்க முடியாமல் ஏற்படும் குழப்பம்
  • – செய்யப்போகும் வேலைகளுக்காக அளவுக்கு மீறி தயார் செய்வது
  • – பிறர் குறை கூறினால் மிகவும் வருந்துவது

மேற்காணும் அறிகுறிகளைப் பற்றி படித்த பின்னர் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவருக்கோ ஏடிஹெச்டி இருப்பதை நீங்கள் சந்தேகப்பட்டால் இதன் தொடர்பிலான கண்டறிலுக்காக மருத்துவரை அணுகுவது நல்லது. காலம் கடந்தாலும் உதவி நாடுவதில் எந்தத் தவறும் இல்லை! மேலும், ஏடிஹெச்டியால் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டோர் படிப்படியாக தங்களது அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதனால் அவர்கள், தங்களது அன்றாட வாழ்க்கையை பாதித்த சில சிரமங்களிலிருந்து விடுபட முடிந்தது. தொடர் முயற்சியால், ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை முழு வீச்சில் பயன்படுத்தும் நிலையை நெருங்கி வர இயலும்.

உங்களுக்கு இந்தச் செய்திக் கட்டுரை பிடித்திருக்கிறது என்றால், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சமூக ஆதரவை நீங்கள் தேட விரும்பினால் Unlocking ADHD உடைய  Facebook ஆதரவுக் குழுவில் சேருங்கள், அல்லது Discord ஆதரவுக் குழுவில் சேருங்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களுக்கு உதவியாக இருந்தால் எங்களுக்கு நன்கொடை அளித்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல்கள் கல்வி அறிவுக்காக வழங்கபடப்பவை. இவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. உங்களுக்கு ADHD உள்ளது என்பதை நீங்கள் சந்தேகப்பட்டால், பயிற்சி பெற்ற சுகாதார நிபுணரை நாடி உங்களது கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

 

  1. எனக்கு ஏடிஹெச்டி உள்ளது என நான் சந்தேகித்தால் என்ன செய்யவேண்டும்?
  2. என் குழந்தைக்கு ADHD – இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், இப்பொழுது என்ன செய்யவேண்டும்?
  3. ஏடிஹெச்டி நிர்வாகத்திற்கான சிகிச்சை, நடவடிக்கை

ஏடிஹெச்டி வளகள்

  • ஆதரவு குழு
  • தொடர்புக்கொள்ளுங்கள்

எங்களைப் பின்பற்றுங்கள்

பதிப்புரிமை © 2023 · ஆளாக்கிங் ஏடிஹெச்டி லிட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை | தனியுரிமைக் கொள்கை
ஆளாக்கிங் ஏடிஹெச்டி லிட். மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்குவதில்லை. எங்கள் இணையத்தளத்திலுள்ள தகவல்களெல்லாம் கல்விக்குறிக்கோளுடன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent.
Cookie SettingsAccept All
Manage consent

Privacy Overview

This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
SAVE & ACCEPT
  • English
  • Melayu
  • 简体中文